இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க பத்திரிகையாளர் துன்புறுத்தப்பட்டதற்கு வெள்ளை மாளிகை திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, “அந்தத் துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகளை நாங்கள் அறிவோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தச் சூழலிலும் ஊடகவியலாளர்கள் ன்புறுத்தப்படுவதை நாங்கள் முற்றாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “இது இது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கே எதிரானது” என்றார்.
மேலும் பத்திரிகை செயலாளர் கரீனே ஜீன் பெரேரே, “பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ய முயற்சிக்கிறார்கள்” என்றார்.
முன்னதாக, வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பணிபுரியும் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக், ஜூன் 22 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் கூட்டாக செய்தியாளர் உரையாற்றியபோது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியதற்காக பாஜக தலைவர் அமித் மாளவியா உட்பட ஆன்லைனில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
"முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க' எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த உந்துதல் கேள்வியை பிரதமர் மோடி முற்றிலுமாக அழித்துவிட்டார்" என்று மாளவியா ட்விட்டரில் எழுதினார்.
தொடர்ந்து ஜான் கிர்பி, “அந்தத் துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகளை நாங்கள் அறிவோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“