மகளே ஆனாலும் தப்பு தப்பு தான்.. 10 மாதக் குழந்தையின் காரை சிறைப்பிடித்த போலீஸ் தந்தை!

விட்டா குழந்தையிடம் லைசன்ஸ், ஹெல்மேட் எல்லாம் கேட்டு இருப்பாரு போல

adorable video
adorable video

adorable video : க்யூட்னெஸ் ஓவர் லோட் என்பார்கள் இந்த வீடியோவை பார்த்த பின் யார் க்யூட், யார் பெஸ்ட் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ மகாணத்தின் சாலையில் 10 மாத பெண் குழந்தை பொம்மை காரை ஓட்டிக் கொண்டு செல்கிறது. அப்போது திீடீரென்று குழந்தையால் காரை நகர்த்த முடியவில்லை. என்னவென்று திரும்பி பார்த்தால் பின்னாடி ஆர்லாண்டோ நகர போலீசார் ஒருவர் குழந்தையின் காரை மெக்னேட் மூலம் நகர விடாமல் தடுக்கிறார்.

ஆனால் அந்த குழந்தையோ போலீசை பார்த்து சிரிக்கிறது. அவர் வேற யாருமில்லை. அந்த குழந்தையின் தந்தை தான். தவறான திசையில் காரை ஓட்டியதற்காக தனது மகளின் பொம்மை காரை போலீஸ் தந்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த வீடியோவை அவரின் மனைவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அடுத்த சில மணி நேரத்திலே இந்த வீடியோ வைரலானது. வீடியோ பார்த்த பலரும் க்யூட் வீடியோ,சூப்பர் போலீஸ் என்ற கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் இதெல்லாம் ரொம்ப ஓவர் போலீஸ் என்ற ஜாலி கமெண்டையும் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் தனது கடமையை தவறாமல் செய்த போலீஸுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு தான்.

கூடவே, ஆர்லாண்டோ நகர போலீசார் ட்வீட்டர் குழு இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. தந்தையும் மகளும், ஒரே நாளில் ஆர்லாண்டோ நகரம் முழுவதும் ஃபேமஸ் ஆகிவிட்டார்கள்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cop pulls 10 month old daughter driving wrong side

Next Story
பாங்காக்: சாலையோர உணவகங்களுக்கு தடையில்லை… சுகாதாரமான உணவு வழங்க அட்வைஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com