Corona killed Florida Doctor Madhvi Aya : இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் 61 வயதான மாதவி ஐயா. ப்ரூக்லின் மாகணாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மருத்துவ துறைக்கு பெரும் சவாலாக அமைந்த கொரோனாவுக்கு எதிராக போராடி வந்த லட்சக் கணக்கான மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு மாதவியும் விதிவிலக்கல்ல. சில வாரங்களில் அவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரின் வீட்டுக்கு மிகவும் அருகில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர்க்ளின் உறவினர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஐயாவின் 18 வயது பெண் அவருக்கு கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி அனைவரையும் கதி கலங்க வைத்துள்ளது.
“காலை வணக்கம் அம்மா…. இது புது நாள். நீங்கள் பத்திரமாக வீடு திரும்பி வர வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன். எனக்கு நீங்கள் வேண்டும். நீங்கள் மட்டும் தான் இந்த உலகில் என்னை புரிந்து கொள்ள கூடிய ஒரே ஆள். நீங்கள் இல்லாமல் நான் வாழ இயலாது. நீங்கள் இல்லாமல் நாங்கள் யாரும் வாழ முடியாது. நான் உங்களை நம்புகின்றேன் அம்மா. கொரோனாவை எதிர்த்து போராடுங்கள். நீங்கள் மிகவும் மன தைரியம் கொண்ட அம்மா. நான் உங்கள் மீது நீங்கள் நினைப்பதை காட்டிலும் அளவு கடந்த அன்பு செலுத்துகிறேன்” என்று அனுப்பியுள்ளார்.
லவ் யூ. நான் நிச்சயம் வீடு திரும்புவேன் என்று மகளுக்கு நம்பிக்கை அளித்தார் மருத்துவர். ஆனால் அவர் அவருடைய சத்தியத்தை காப்பாற்றவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா தாக்கதால் அவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil