United kingdom appreciates NHS workers across the nation
Corona outbreak united kingdom appreciates NHS workers across the nation : வியாழக்கிழமை அன்று, கொரோனாவைரஸுக்கு எதிராக நாடு முழுவதும் போராடி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் அவரவர் வீடுகளின் முன்பு நின்று கைகளை தட்டியும். பாத்திரங்களை தட்டியும் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். பிக்பென் கடிகாரம் மற்றும் லண்டன் ஐ ஆகியவை நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராயல் குடும்பத்தின் வாரிசுகள், பிரதமர் மற்றும் சான்சிலர் ஆகியோரும் தங்களின் நன்றிகளை கைகளை தட்டி தெரிவித்துக் கொண்டனர்.
Advertisment
Advertisements
22ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று மாலை 5 மணி அளவில் இந்திய மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டுமாறு கேட்டுக் கொண்டார் மோடி. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் அன்றைய மாலையை சிறப்பான சம்பவமாக்கினார்கள்.