உலகளவில் 25,000க்கும் மேற்பபட்டவர்களுக்கு கொரோனா வைரஸ்

சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் இதுவரையில் 490 மக்கள் இறந்துள்ளனர். 24,324 சீன மக்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

By: Updated: February 5, 2020, 07:02:19 PM
சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் இதுவரையில் 490 மக்கள் இறந்துள்ளனர். 24,324 சீன மக்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதனால் தோன்றியது என்ற கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான் அல்லது சோப்புகள் மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனவரி 29, 2020 அன்று சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் வெப்பநிலையைச் சரிபார்க்கும் காட்சி . உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. பிப்ரவரி 4, 2020 செவ்வாய்க்கிழமை: தாய்லாந்தின் பாங்காக்கில் காற்று மாசுபாட்டிலிருந்தும், கொரோனா வைரஸில் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள பயணிகள் முகமூடிகள் அணிந்துள்ளனர். 42 வயதான தென் கொரிய பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார் என்பது கண்டறியப் பட்டது. பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் பாதுகாப்பு உடையணிந்த ஒருவர், சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவரின் சாமான்களை சரிபார்க்கிறார். இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சியில் புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கவனிப்பதற்காக ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை சுத்தம் செய்த பின்னர் இந்திய தொழிலாளர்கள் குப்பைகளுடன் நடந்து செல்கின்றனர். சீன மக்கள் தென் கொரியாவிற்குள் நுழைய தடை விதிக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் தென் கொரியாவின் சியோலில் உள்ள சீனத் தூதரகத்திற்கு அருகே போராட்டம் நடத்துகின்றார்கள். கம்போடியாவின் புனோம் பென் நகரில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பள்ளி சிறுவன் கொரோனா வைரஸைத் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பதற்காக முகமூடி அணிந்து செல்லும் காட்சி. ஜனவரி பிற்பகுதியில் கம்போடியாவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் . பிப்ரவரி 4ம் தேதி சீனா வுஹான் பகுதியில் இருந்து மலேசியாவின் செபாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது எடுத்த காட்சி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus china global emergency pandemic vaccine death toll

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X