கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த பாதிப்பு ஏற்படுவது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். நோய்த்தொற்று ஏற்படும்போது உண்டாகும் எவ்வித நோய் எதிர்ப்பு சக்தி, மீண்டும் பாதிப்பு ஏற்பட காரணமாக இருப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த நோய் எதிர்ப்பு சக்தி, இன்னும் எத்தனை ஆண்டுகாலம், நோயாளியின் உடலில் இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் சிலருக்கு மீ்ண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக ஆங்காங்கே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள், அவர்கள் அதே நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் அல்லது உடலில் எஞ்சியிருந்த வைரசே, மீ்ண்டும் பாதிப்பு ஏற்பட காரணம் என்றும், அவர்களை சோதனை செய்தால் தவறான பாசிட்டிவ் முடிவுகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோயாளிகளால் வைரஸ் பரவியதாக எவ்வித ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு ஒரு வைரஸ் தொற்று ஏற்படின், அந்த பாதிப்பு மீண்டும் அவருக்கு 3 மாதம் முதல் 1 ஆண்டிற்குள்ளோ வர வாய்ப்புண்டு. ஆனால், இவ்வளவு விரைவாக வருவதற்கான காரணம் தெரியவில்லை, ஒருவேளை கொரோனா வைரசில் இதுபோன்று இருக்கலாம் என்று எதிர்பார்க்க்பபடுவதாகவும், இதுகுறித்த ஆராய்ச்சியின் மூலமே நாம் எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைகழகத்தின் குளோபல் பொது சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் பிலிப் லாண்ட்ரிகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் ஆன்ட்டிபாடிகள் சிலமாதங்களுக்குள்ளாக செயலிழந்து விடுவதால், மீண்டும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆன்ட்டிபாடிகள் மட்டும் வைரசை எதிர்த்து போராடுவது இல்லை என்றும், நோய் எதிர்ப்பு சக்தியின் மற்ற பாகங்களும் இணைந்து செயல்பட்டு தேவையான பாதுகாப்பை வழங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று வந்தவருக்கு மீண்டும் தொற்று வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதுகுறித்து தடுப்பு மருந்து விவகாரத்தில் நாம் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Can you get coronavirus twice?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.