10 பக்க அளவிற்கு மரண அறிவிப்புகள் : இத்தாலியை கலங்கடித்த கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பு, இத்தாலியை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸால் இறந்தவர்கள் தொடர்பான மரண அறிவிப்புகள் இத்தாலியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் 10 பக்கங்கள் அளவிற்கு வெளியாகியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

corona virus, italy, death toll, china, obituary, corona virus in Italy, Italy, magazine, L'Eco di Bergamo
corona virus, italy, death toll, china, obituary, corona virus in Italy, Italy, magazine, L'Eco di Bergamo

கொரோனா வைரஸ் பாதிப்பு, இத்தாலியை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸால் இறந்தவர்கள் தொடர்பான மரண அறிவிப்புகள் இத்தாலியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் 10 பக்கங்கள் அளவிற்கு வெளியாகியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில், 15ம் தேதி மட்டும், 1,441 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 1,809 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 24 ஆயிரத்து, 747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நகரமான பெர்காமாவிலிருந்து வெளியாகும், ‘லிகோ டி பெர்காமா’ என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த பிப்.,9ம் தேதி இந்நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு அரை பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 13ம் தேதி வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை ஒருவர் சமூக வலைதளமான டுவிட்டரில் வீடியோவாக வெளியிட, அது வைரலானது. நெட்டிசன்கள், இத்தாலிக்காக தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus italy death toll china obituary

Next Story
அரசியல்வாதிகள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை… கொரொனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்Juventus, Tom Hanks, Iran , Chelsea, Arsenal, tom hanks, australia , Canada, Justin Trudeau, கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்ட பிரபலங்கள், ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபி கிரிகோயர் ட்ரூடோ, Justin Trudeau wife Sophie Gregoire Trudeau,famous people around the world tested positive for coronavirus, டாம் ஹன்க்ஸ், politicians, cinema stars, Mikel Arteta, Daniele Rugani, Coronavirus, COVID 19, Callum Hudson Odoi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express