/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-22T202110.987.jpg)
corona virus, white house, USA, Michelle obama, corona virus pandemic, , barack obama, kennedy,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், ஐந்து தலைமுறைகளாக பணியாற்றி 11 அதிபர்களுக்கு சேவகம் புரிந்து வந்த வில்சன் ஜெர்மேன், கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
1957ம் ஆண்டு ஹெய்சன்ஹோவர் நிர்வாகத்தின்போதே அவர் வெள்ளை மாளிகையில் ஊழியர் பணியை துவக்கினார்.
வில்சன் ரூஸ்வெல்ட் ஜெர்மேன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முதலில் தூய்மைப்பணியாளராகவே சேர்ந்தார். அதிபரின் மனைவியின் பரிந்துரையின் பேரில், ஜெர்மேன், தலைமை சமையல்காரர் ஆக பணியுயர்வு செய்யப்பட்டார்.
1961 -63ம் ஆண்டுகளில் அதிபர் கென்னடி காலத்தில் வெள்ளை மாளிகையில் நுழைந்த இவர், 2009-17ம் ஆண்டுகாலத்தில் அதிபர் ஒபாமாவின் காலத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தார்.
2012ம் ஆண்டில், ஒபாமா நிர்வாகத்தின்போது, அவரது பதவிக்காலம் நிறைவுபெற்றது. இவரது பணி ஓய்வு நிகழ்ச்சியில், ஜெர்மேன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அவருக்கு ஒபாமா பல்வேறு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வில்சன் ஜெர்மேன், கடந்த வாரம் மரணமடைந்தார்.
ஜெர்மேனின் மரண செய்தியை கேள்விப்பட்ட மிட்செல் ஒபாமா, இரங்கலை தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, வில்சன் ஜெர்மேனுடன் தாங்கள் இருந்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.