உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுவுக்கான தலைமைப் பொறுப்பை, இந்தியா மே மாதத்தில் ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா தொற்றால் உலக நாடுகள் பாதிக்குள்ளாகியுள்ள சூழலில், நிா்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் மாநாடு மே மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின்போது நிா்வாகக் குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினா்களும், அக்குழுவின் தலைவரும் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.அதைத் தொடா்ந்து மே மாதம் 22-ஆம் தேதி நிா்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, இந்தியாவின் பிரதிநிதி அக்கூட்டத்துக்குத் தலைமையேற்கவுள்ளாா்.
தற்போது நிா்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜப்பான் வகித்து வருகிறது. அந்நாட்டின் ஓராண்டு அவகாசம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.அதைத் தொடா்ந்து, நிா்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழு கடந்த ஆண்டே ஒருமனதாகப் பரிந்துரைத்திருந்தது. அந்நிா்வாகக் குழுவில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இடம்பெறவும் இந்தியாவுக்கு தென்கிழக்கு ஆசிய குழு ஆதரவு தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுவுக்கான தலைமைப் பொறுப்பை மே மாதம் ஏற்கும் இந்தியா, அடுத்த ஓராண்டுக்கு அப்பொறுப்பில் நீடிக்கும்.நிா்வாகக் குழு: நிா்வாகக் குழுவில் 34 உறுப்பினா்கள் இடம்பெறுவா்.
உலக சுகாதார அமைப்பின் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பு நிா்வாகக் குழு வசமே உள்ளது. நிா்வாகக் குழுவின் தலைவா், உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸுடன் இணைந்து பணியாற்றுவாா். பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநா், நிா்வாகக் குழுவின் தலைவருடன் ஆலோசிப்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இயக்குநா் டெட்ரோஸின் 5 ஆண்டு பதவிக்காலம் 2021-ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, உலக சுகாதார அமைப்பின் அடுத்த இயக்குநரைத் தோ்ந்தெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.மேலும், உலக சுகாதார அமைப்பின் நிதிநிலைக் குழுவிலும் இந்தியா இடம்பெறவுள்ளது. இந்தோனேசியாவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள சூழலில், இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Corona virus world health organsization leadership india
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்