Coronavirus COVID19 10 times deadlier than swine flu H1N1 says WHO : கொரோனா வைரஸின் தன்மை குறித்து முதன்முறையாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். இதுவரை கொரோனா நோய் தொற்று குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல், செய்யப்படவேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே கூறிக் கொண்டிருந்தது WHO.
Advertisment
இந்நிலையில் தற்போது முதன்முறையாக கொரோனாவின் தீவிர தன்மை குறித்து அறிவித்துள்ளது WHO. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் நிலை குறித்து ஜெனிவாவில் இருக்கும் உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில் இருந்து அவ்வமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 2009ம் ஆண்டு பரவிய பன்றிக்காய்ச்சல் (H1N1)-ஐ பரப்பிய ஸ்வைன்ஃப்ளூ வைரஸ் கூட 6 லட்சம் பேரை தான் பாதித்தது. உலக அளவில் 18 ஆயிரம் நபர்கள் உயிரிழந்தது. ஆனால் கொரோனா வைரஸ் இதுவரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 263 பேரை தாக்கியுள்ளது. அதில் 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், ஸ்வைன் ப்ளூவை காட்டிலும் 10 மடங்கு மிகவும் மோசமான வைரஸ் இது என்று அவர் அறிவித்தார். இந்நோயால் மிகவும் பாதிப்படைந்த இத்தாலி, ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகள் தற்போது மெல்ல மெல்ல தாக்கத்தில் இருந்து மீண்டு வருகிறது.