கொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மெக்காவுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான விசாக்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Coronavirus fear, Coronavirus fear Saudi Arabia stop entry visa for pilgrims to Mecca, கொரோனா வைரஸ் அச்சம், சவுதி அரேபியா, Saudi Arabia, மெக்கா பயணிகளுக்கு விசா வழங்க தடை, Coronavirus china, Mecca pilgrims
Coronavirus fear, Coronavirus fear Saudi Arabia stop entry visa for pilgrims to Mecca, கொரோனா வைரஸ் அச்சம், சவுதி அரேபியா, Saudi Arabia, மெக்கா பயணிகளுக்கு விசா வழங்க தடை, Coronavirus china, Mecca pilgrims

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மெக்காவுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான விசாக்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கில் இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபத்தான வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் பரவியுள்ளது.

இதனால், சவுதி அரேபியா மெக்காவுக்குச் செல்வதற்காக வரும் பயணிகளுக்கு விசா விசா வழங்கப்படாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா அரசு மெக்கா, மதீனா புனித பயணங்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சவுதி அரேபியா அரசு “சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விஷயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச நடவடிக்கைகளை தாங்களும் நடிமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில், மெக்காவுக்கு புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதன் மூலம் செயல்படுத்த இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அதனால், மெக்கா மதீனாவுக்கு புனித பயணம் செய்ய சவுதி அரேபியாவிற்குள் நுழைவதை சவுதி அரேபியா அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதனுடன், கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகள் சவுதி அரேபியா வருவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் பகுதியில் நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 15 பலியாகியுள்ளனர். வளைகுடா நாடுகளான குவைத், பஹ்ரைன் நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவுதி அரேபியா மெக்கா புனித பயணிகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus fear saudi arabia government stop entry visa for pilgrims to mecca

Next Story
அட, இங்க பார்றா… ரஜினி ரசிகையை நிச்சயம் செய்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்glenn maxwell, glenn maxwell girlfriend vini raman, கிளேன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவழிப் பெண்ணை நிச்சயம் செய்த கிளேன் மேக்ஸ்வெல், glenn maxwell - vini raman, glenn maxwell fiancee, வினி ராமன், vini raman,indian origin girl, ரஜினிகாந்த், படையப்பா, glenn maxwell wedding,rajinikanth padayappa, vini raman favourite tamil movie, maxwell mental health break
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com