பிப்ரவரி இறுதியில் நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிய வந்தது. இதுவரையில் 1219 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதில் 22 நபர்கள் உயிரிழந்துள்ள்ளனர். மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பாகவே மார்ச் மாதத்தில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : 7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி! இந்த மனசு யாருக்கு வரும்?
டெஸ்ட் அண்ட் ட்ரேஸ் மூலமாக தொடர்ந்து கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. எல்லைகள் மூடப்பட்டு மக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டதால் கொரோனா நோயால் ஏற்பட இருந்த பெரும் இழப்பில் இருந்து தப்பிக் கொண்டது அந்நாடு. 100 நாட்களுக்கும் மேலாக சமூக பரவல் ஏதும் இல்லாமல் அந்நாடு செய்திருக்கும் சாதனை மிகப்பெரியது என்று உலக தலைவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் புதிய கொரோனா நோய் தொற்றுகள் உறுதி செய்யப்படாத நிலையில் அந்நாடு முழுவதும் 23 நபர்கள் தற்போது கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மற்ற நபர்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil