உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு நிலை இந்தியாவில் அமலில் உள்ளது. எந்த ஒரு தொழிலும் நடைபெறாத நிலையில் மாபெரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை உருவாக்க உள்ளது கொரோனா. உலக நாடுகள், இரண்டாம் உலகப் போருக்கு பின்னாள் எதிர் கொண்டிருக்கும் மாபெரும் சீரழிவு இந்த கொரோனா. பொருளாதார ரீதியாகவும், மனித இழப்புகள் ரீதியாகவும் உலகநாடுகள் மாபெரும் இழப்பினை சந்தித்து வருகின்றன.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்நிலையில் ஐ.நாவின் ஓர் அங்கமாக இருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2-வது கட்டக் கண்காணிப்பு: கரோனாவும் உலக வேலைவாய்ப்பும் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழில் தங்களில் ஈடுபடுத்தியிருக்கும் 40 கோடி மக்கள், ஊரடங்கு / கொரோனாவிற்கு பிறகு வறுமையில் வீழும் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும், நடைபெற்று வரும் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 19.50 கோடி நபர்கள் வேலை இழப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது.
உலக அளவில் சுமார் 200 கோடி தொழிலாளர்கள் கடும் வறுமையை சந்திக்க உள்ளனர் என்றும், சரியான அதே நேரத்தில் துரித கதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தான் நாம் உயிர் வாழ்வதை உறுதி செய்யும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர் அறிவித்துள்ளார். சுற்றுலாத்துறை, உணவகங்கள், சேவை, உற்பத்தி , சில்லறை விற்பனை, நிர்வாகம் போன்றவை மிகவும் கடுமையாக பாதிப்படையும் என்றும் அந்த அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.