கொரோனாவை ஒழிப்பது கடினம் - கை விரித்த உலக சுகாதார நிறுவனம்
அரசியல், தொழில்நுட்பம், மற்றும் நிதி ரீதியில் ஒத்துழைப்பு கொடுத்து ஆதரவு அளித்தால் மட்டுமே இந்த போரில் இருந்து நாம் வெற்றி பெற முடியும் - மைக்கேல் ரையான்
Coronavirus outbreak Hard to predict when a pandemic will be over says WHO officials : ஜெனிவா நகரில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களின் இயக்குநர், மருத்துவர் மைக்கேல் ரேயன் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கொரோனா நிலவரம் குறித்து அறிவிப்பது வழக்கம். நேற்று ஊடங்களுக்கு பேட்டி அளித்த அவர் ”உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது”. அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து, கொரோனாவை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ”நமது மனித சமூகத்தில் இருந்து இந்த வைரஸ் விரைவில் செல்லாது என்றும், ஆனால் காலப்போக்கில் இது மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வைரஸ் எப்போது மறையும் என்பதையும் நம்மால் கணிக்க இயலவில்லை.
தடுப்பு மருந்து மட்டுமே இந்த வைரஸுக்கான ஒரே தீர்வாக அமையும். ஆனால் அது மிகவும் வீரியம் மிக்கதாகவும், அதே சமயத்தில் அனைத்து மக்களுக்கும் மிகவும் எளிமையில் கிடைக்க கூடிய ஒன்றாகவும் அது இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். அனைத்து நாடுகளும் அரசியல், தொழில்நுட்பம், மற்றும் நிதி ரீதியில் ஒத்துழைப்பு கொடுத்து ஆதரவு அளித்தால் மட்டுமே இந்த போரில் இருந்து நாம் வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“