scorecardresearch

டாக்டர்களின் தீவிர முயற்சி : ஒரு வழியாக இத்தாலியில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா!

இத்தாலியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

Coronavirus outbreak Italy reports slowdown in deaths
Coronavirus outbreak Italy reports slowdown in deaths

Coronavirus outbreak Italy reports slowdown in deaths : சீனாவுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. ஐரோப்பாவில் இருக்கும் இந்த நாடு சீனாவைக் காட்டிலும் அதிக அளவில் உயிரிழப்புகளை இந்த கொரோனாவால் சந்தித்துள்ளது. நாளுக்கு நாள் இந்நோயால் அவதிக்கு உள்ளான மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதாக நேற்றைய ரிப்போர்ட்டில் அறிவித்துள்ளது இத்தாலி.

மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு – 350 படுக்கைகளுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி! (வீடியோ)

Coronavirus outbreak Italy reports slowdown in deaths

இந்த நோய்க்கு இதுவரை இத்தாலி 6,077 மக்களை பலி கொடுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். இத்தாலி சிவில் ப்ரொடெக்சன் ஏஜென்ஸி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.

கடந்த வாரம் மிகவும் அதிக அளவில் நோய் பரவியதும், நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருவதாலும், நோயின் தீவிரத்தை இத்தாலி உணர்ந்ததாலும் தற்போது இதன் தீவிரம் இத்தாலியில் குறைய துவங்கியுள்ளது என்று அந்த ஏஜென்ஸி குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு அரசாங்கம் போதிய ஏற்பாடுகளை செய்த போதிலும் மக்களின் கவனக்குறைவால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இத்தாலியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க : மலை கொரில்லாக்கள் கொரோனாவால் முழுமையாக அழியக்கூடும்!

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus outbreak italy reports slowdown in deaths