சீக்கியர்களால் மூச்சுவிடும் நியூயார்க் நகரம்! நிறைவாக உறங்கும் அமெரிக்கர்கள்!

அமெரிக்கா மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிலும் “யுனைட்டட் சீக்ஸ்” என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஒரு குழுவாக இணைந்து தேவையான உதவிகளை மக்களுக்கு செய்கின்றனர். 

coronavirus outbreak new york gurudwara prepares 30 thousand meals daily
coronavirus outbreak new york gurudwara prepares 30 thousand meals daily

coronavirus outbreak new york gurudwara prepares 30 thousand meals daily : அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 68 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் நியூயார்க் நகரில் மட்டும் அதிகபட்சமாக 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவின்பேரில் நியூயார்க் நகரம் முடங்கியிருக்கின்றது. மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து கொண்ட அந்நகர மேயர் பில் டி பேசியோ அங்கிருக்கும் குருத்வாராவை அணுகியுள்ளார். மக்களின் தேவையை உணர்ந்த குருத்வாரா தினமும் 30,000 நபர்களுக்கான உணவை திங்கள்கிழமை முதல் தயாரித்து வருகிறது.

மேலும் படிக்க : வீட்டுக்குள் இருந்தால் நோய் தொற்று குறையுமா? WHO இயக்குநர் எச்சரிக்கை

சாதம், காய்கறிகள், பருப்பு சேர்க்கப்பட்ட சைவ உணவினை தயாரித்து நேரடியாக மக்களுக்கு சென்று தருகின்றனர் சீக்கியர்கள். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, முகக்கவசங்கள் அணிந்து சுகாதாரமான முறையில் இந்த உணவு தயாரித்து தரப்படுகிறது. உணவுகளை தயாரிக்க தேவையான பொருட்களை தன்னார்வலர்கள் விநியோகித்து வருகின்றனர். தனிமையில் இருப்பவர்கள் முதியவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. நியூயார்க் மட்டுமில்லாமல் அமெரிக்காவின் அநேக நகரங்களிலும் உள்ள குருத்வாராக்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அமெரிக்கா மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிலும் “யுனைட்டட் சீக்ஸ்” என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஒரு குழுவாக இணைந்து தேவையான உதவிகளை மக்களுக்கு இவர்கள் செய்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus outbreak new york gurudwara prepares 30 thousand meals daily

Exit mobile version