Coronavirus outbreak Singapore announces 1-month lockdown : சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவை தற்போது அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங்.
மேலும் படிக்க : அமீரகம் போல் செயல்பட வேண்டும்… ஊரடங்கை மீறினால் தண்டனை என்ன தெரியுமா?
அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகள் மட்டும் மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து இயங்கி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள், பெருமளவிலான பணியிடங்கள் 7ம் தேதி முதல் மூடப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்க்கு சிங்கப்பூர் நாட்டில் இன்று வரை 5 பேர் பலியாகி உள்ளனர். 1,049 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் நாடு என்பதால் நோய் தொற்று அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி தனிநபர் இடைவெளியை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும், 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராத தொகையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.