coronavirus outbreak United Kingdom Prime Minister Boris Johnson returned to PM office : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் முழுமையாக குணம் அடைந்தார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் தலைவராக இருந்தார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனாவுக்கு எதிரான போரில் பலத்துடன் போராடி, நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார். கடந்த மாதமே அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முதலில் தனிமைப்படுத்தப்பட்டார்.
Advertisment
பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நிலை கொஞ்சம் கவலைக்கிடமானதும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார். சில நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற அவர், பிறகு நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். வீடு திரும்பி இரு வாரங்கள் ஆன நிலையில், நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளார் போரிஸ் ஜான்சன்.
முழுமையாக குணம் அடைந்த அவர் நின்று தன்னுடைய அலுவலகத்திற்கு வந்துள்ளார். லண்டன் 10 டவுனிங் சாலையில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு வந்த அவரை கரவொலியுடன் வரவேற்றனர் அலுவலர்கள். இனி முழு நேரம் கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக அவர் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”