ஒரே நாளில் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா... நொறுங்கிய அமெரிக்கா!

இந்த சீரழிவிற்கு உலக சுகாதார அமைப்பும், சீனாவும் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டு.

Coronavirus outbreak united states of America reports 2000 deaths in last 24 hours : இது நாள் வரையில் கொரோனாவுக்கு அதிகமாக இழப்பினை சந்தித்து வந்தது இத்தாலி தான். ஆனால் உலக அளவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள மக்கள் அமெரிக்கர்கள் தான். கடந்த ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2000-த்தை தொட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 12, 722 ஆகும். இத்தாலியில் அதிகபட்சமாக 17,127 நபர்களும், ஸ்பெயினில் 13,978 நபர்களும் பலியாகியுள்ளனர். இந்த நோய் குறித்து ஆரம்பம் முதலே மிகவும் மேம்போக்காக நடந்து கொண்டார் அதிபர் ட்ரம்ப். உலக நாடுகள் அனைத்தும் சுதாகரித்து கொண்ட போதும் கூட, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு 4 லட்சம் நபர்கள் வந்துள்ளனர்.

மேலும் படிக்க : மோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை

இதுவரை 14,24,000 நபர்கள் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதில் 10,41,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகில் இதுவரை இந்நோய்க்கு 81,968 பேர் உயிரிழந்துள்ளனர்.  உடல் வெப்பத்தைக் குறைக்கும் மலேரியா நோய்க்கான மருந்து ஹைட்ராக்ஸி குளோரோக்யின் மருந்தினை, இந்தியாவை மிரட்டும் தொனியில் கேட்டு பெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப். மேலும் இந்த சீரழிவிற்கு உலக சுகாதார அமைப்பும், சீனாவும் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close