5 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை … அசத்திய அமெரிக்கா!

இதற்கு முன்பு ஜெர்மனியின் ராபர்ட் போஷ் நிறுவனம் இரண்டரை மணி நேரங்களில் நோய் தொற்றினை உறுதி செய்யும் கருவியை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

By: March 28, 2020, 3:35:50 PM

Coronavirus outbreak US company unveils portable equipment to test : அமெரிக்காவைச் சேர்ந்த அபாட் ஆய்வகம் 5 நிமிடங்களில் நோய் தொற்றினை கண்டறியும் கருவி ஒன்றை கண்டறிந்துள்ளது. வெறும் ஐந்து நிமிடங்களில் தொற்று நோயை கண்டறியும் இந்த கருவி, நோய் தொற்று இல்லை என்பதையும் வெறும் 13 நிமிடங்களில் உறுதி செய்துவிடும்.  சிறிய டோஸ்டர் இயந்திரம் அளவில் தான் இது இருக்கும். மூலக்கூறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளாது என்று அபாட் நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : இக்கட்டான சூழலிலும் மனித நேயம் காட்டிய அமெரிக்கா… இந்தியாவுக்கு அளித்த நிதி எவ்வளவு?

இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதார மையங்கள் மற்றும் ஆய்வகங்களில் இந்த கருவியை பயன்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 லட்சம் நபர்களுக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கருவி மூலம் எளிதில் இந்நோய்க்கு ஆளானவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதற்கு முன்பு ஜெர்மனியின் ராபர்ட் போஷ் நிறுவனம் இரண்டரை மணி நேரங்களில் நோய் தொற்றினை உறுதி செய்யும் கருவியை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அதி தீவிர முயற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய்க்கு கிட்டத்தட்ட 6 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வார துவக்கத்தில் இந்த கருவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus outbreak us company unveils portable equipment to test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X