WHO applauds India's lock down decision : இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. சமூக பரவலை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது இந்திய அரசு. சரியான நேரத்தில் மிகவும் சரியான முடிவை இந்தியா மேற்கொண்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Advertisment
03ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்உம். அதன் மூலம் தான் இந்நோய் பரவல் தடுக்கப்படும். இந்த நடவடிக்கையை இந்தியா சரியான நேரத்தில் ஏடுத்ததால் தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவான அளவில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
குறைந்த எண்ணிக்கையில் பாதிப்புகள் இருந்த போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வைரஸ் பரவல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி எளிமையாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே பெருங்கொள்ளை நோயாக அறியப்பட்ட சின்னம்மை மற்றும் போலியோவின் பரவலை தடுத்து இந்தியா உலக நாடுகளுக்கே முன்னோடியாக இருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது குறிப்பிடத்தக்கது.