Coronavirus: Prince Charles tests positive for COVID-19 : இங்கிலாந்து அரசு குடும்பத்தின் அடுத்த வாரிசான இளவசர் சார்லஸுக்கு கொரோனா நோயின் தொற்று இருந்த நிலையில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கமிலாவுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை முடிவில் இளவரசர் சார்லஸூக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன் மனைவியுடன் ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறார். ஐஸொலேசனில் இருக்கும் சார்லஸிற்கு அறிகுறிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் அவர் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும் இங்கிலாந்து நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அபெர்தீன்ஷையரில் இருக்கும் தேசிய மருத்துவ சேவையான (NHS)-ல் இவர்கள் இருவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெய்ன் போன்ற நாடுகள் மிகப்பெரிய இழப்பினை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷில் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த செய்தி அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”