ஊழலற்ற நாடுகள் பட்டியல்... அமெரிக்காவிற்கு பின்னடைவு... முன்னேற்றம் கண்டுள்ள இந்தியா!

தற்போது மூன்று மதிப்பெண்கள் அதிகரித்து 41 புள்ளிகளைப் பெற்றுள்ளது...

Corruption Perceptions Index 2018 : ட்ரான்ஸ்பெரன்ஸி இண்டெர்நேசனல் (Transparency International) என்ற நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ஊழலற்ற உலக நாடுகளின் பட்டியலில் 78வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியார்.

ட்ரான்ஸ்பெரன்ஸி இண்டெர்நேசனல் நிறுவனம் தாங்கள் நடத்திய (Corruption Perceptions Index) ஊழலற்ற நாடுகளில் பட்டியலில் 180 நாடுகள் இடம் பிடித்துள்ளன.

Corruption Perceptions Index 2018 – 78வது இடத்தைப் பிடித்த இந்தியா

முதலிடத்தில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் 88 மற்றும் 87 மதிப்பெண்களுடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. 10,13 ஆகிய மதிப்பெண்களைப் பெற்று கடைசி இடங்களில் சோமாலியா, சிரியா, தெற்கு சூடான் ஆகிய உள்ளன.

இந்தியா கடந்த ஆண்டு (2017ற்கான பட்டியலில்) 39 மதிப்பெண்களே பெற்றிருந்தது. தற்போது மூன்று மதிப்பெண்கள் அதிகரித்து 41 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

39 புள்ளிகள் பெற்று சீனா 87வது இடத்திலும், 33 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் 117வது இடத்திலும் உள்ளது. இந்த ஆய்வானது 180 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு நாடுகளின் நிலைமை 50 புள்ளிகளுக்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றுள்ளது. சராசரி மதிப்பெண்கள் என்றால் 43 தான்.

எப்போதுமே முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடிக்கும் அமெரிக்கா 4 புள்ளிகளை இழந்து 71 மதிப்பெண்களையே பெற்றுள்ளது. தற்போது முதல் 20 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இல்லை. அயர்லாந்து, ஜப்பான், ஃபிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்து தான் அமெரிக்கா உள்ளது. பட்டியலில் 22வது இடம் பிடித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close