/tamil-ie/media/media_files/uploads/2020/04/image-13.jpg)
அமெரிக்கா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த மரணங்கள் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டியது. இத்தாலியை விடவும் கோவிட்- 19 தொற்றில் மிகவும் மோசமாக பாதிப்படைந்த ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 6,367 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இயல்புநிலை திரும்புவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வரும் நிலையில், அமெரிக்க இந்த மோசமான வரலாற்று அனுபவத்தை பதிவு செய்திருக்கிறது. அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் உத்தரவு இந்த மாத இறுதியோடு முடிவடைகிறது. இந்த முடக்க நிலை நீட்டிக்கப்படாவிட்டால், வரும் கோடை காலத்துக்குள் மொத்த இறப்பின் எண்ணிக்கை 200,000 வரை எட்டக்கூடும் என்று பொது சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஞாயிற்றிக்கிழமையன்று, ரஷ்யா 2,186 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளதாகாவும், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 24-ல் இருந்து 130 ஆக உயர்ந்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் என்கிற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, வெனிசுவேலா அதிபர் நிக்கோலா மதுரோ, நாடு தழுவிய தனிமைப்படுத்தலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். வைரஸை எதிர்த்துப் போராட சீனாவிலிருந்து நான்காவது மருத்துவப் பொருட்கள் வந்த நாளன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெனிசுலாவில் 175 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், ஒன்பது பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெனிசுவேலா நாட்டின் அரசியல் எதிரியாக கருதப்படும் கொலம்பியா நாட்டின் எல்லையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான வெனிசுலா மக்களிடன் மூலமாக தொற்று பரவலுக்கான ஆபத்து அதிகம் இருப்பதாக மதுரோ கூறினார்.
சமூக தூரத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும், இரண்டாம் எலிசபெத் வேண்டுகோள் : பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், ஈஸ்டர் வார இறுதி நாட்களில், தனிமைப்படுத்தலுக்கான அவசியத்தை பிரிட்டன் மக்களுக்கு எடுத்துரைத்தார். வின்ட்சர் கோட்டையில் இருந்து இரண்டு நிமிட ஆடியோவில்,ஒதுங்கி இருப்பதன் மூலம், மற்றவர்களின் பாதுக்காப்பை நாம் உறுதி செய்கின்றோம்,”கொரோனா வைரஸ் “நம்மை வெல்லாது” என்றும் கூறினார். பிரிட்டன் நாட்டின் போர்க்கால வரலாறுகளை நினைவு கூர்ந்த அவர் ," நாம் மீண்டும் சந்திப்போம்" என்றும் மக்களுக்கு உறுதியளித்தார்.
சீனாவில் மீண்டும் அதிக எண்ணிக்கை: நேற்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 99 புதிய வழக்குகளை சீனா பதிவு செய்துள்ளது. சமீபத்திய வாரங்களில் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாக உணரப்படுகிறது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம்(என்.எச்.சி) கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்த மொத்தம் 1,280 பேர் கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில்,481 பேர் மருத்துவமனைகளில் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், 799 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 36 பேர் தீவிர சிகிக்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த, 99 புதிய வழக்குகளில், 97 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் : வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அரசு ஊடகத்தின் வாயிலாக நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், "கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க கடுமையான நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் வேண்டும் என்று தெரிவித்தார்.
வட கொரியாவில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இருப்பினும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட பதிவு எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் வட கொரியா பிரதிநிதி இந்த வாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
மாண்ட்ரீல் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2021 வரை தள்ளி வைப்பு : யு.எஸ். ஓபனுக்கு முன்னதாக நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாண்ட்ரீல் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2021 வரை தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் "ஆகஸ்ட் 31 வரை பொது நிகழ்வுகள் நடத்த கியூபெக் அரசு நிர்வாகம் விதித்த தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.