கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகானத்தில் கோரோனா வைரஸ் பாதிப்பால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததை அந்த மாகான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் பச்சிளம் குழந்தைகள் பலியாவது மிகவும் அரிதான துயரச் சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தின் ஆளுநர் ஜே.பி.பிரிட்ஸ்கெர், கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவித்தார். பச்சிளம் குழந்தை இறந்த செய்தியைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் குழந்தையின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும்பிரிட்ஸ்கெர் கூறினார்.
இலினாய்ஸ் மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை, கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பால் சிகாகோவில் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை இறந்ததாகக் கூறியுள்ளனர்.
இலினாய்ஸ் சுகாதாரத்துறை இயக்குனர் நிகோஸி எஸிகே ஊடகங்களிடம் கூறுகையில், “கொரோனா பாதிப்பட்ட குழந்தை மரணம் இதற்கு முன்பு நடந்தது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த பச்சிளம் குழந்தை பறிகொடுத்தது அந்த குடும்பத்திற்கு மிகவும் துயரமான சம்பவம். இந்த குழந்தையின் இறப்பு அனைவரின் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், பிரெஞ்சு சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன், பாரிஸின் ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறினார்.
இளம் வயதினரை கொரோனா வைரஸின் கடும் தாக்கம் மிகவும் அரிதானது என்று சாலமன் குறிப்பிட்டார். கடந்த வாரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பொது சுகாதாரத் துறை, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தது. ஆனால், முகமை, இந்த நோயாளியின் நிலைமை சிக்கலானது இதற்கு மாற்று காரணம் இருக்கலாம் என்று கூறியது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பல ஆய்வுகள் வயதான நோயாளிகளையும் அடிப்படை கண்காணிப்பில் உள்ளவர்களையும் விகிதாசார அளவில் பாதிக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளன. உலகில் அதிக எண்ணிக்கையிலான புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் அமெரிக்காவில் உள்ளனர். 1,20,000 க்கும் அதிகமான நோயாளிகள் இருந்தபோதிலும், கொரோனா பாதிப்பால் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளன.
சனிக்கிழமை பிற்பகலின் போது, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 450-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்துள்ளன. அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் கொரோனா ஏற்பட்ட 13 புதிய உயிரிழப்புகளில் சிகாகோ குழந்தையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"