Advertisment

கொரோனா மறுதொற்றின் போது தீவிர அறிகுறிகள் இருக்கும் : ஆய்வு

தற்போதைய சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளில் கண்டுபிடிக்க இயலாத நிலை உருவாகலாம்

author-image
WebDesk
New Update
COVID-19 patients might experience more severe symptoms on reinfection

 PTI

Advertisment

COVID-19 patients might experience more severe symptoms on reinfection : இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபருக்கு நோயின் அறிகுறிகள் கடுமையாக இருக்கும் என்று ஆராய்ச்சி ஒன்று அறிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியின் அறிக்கை லான்செட் இன்ஃபெக்சன் டிசீசஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளாது. இதற்கு முன்பு அறிய இயலாத நோய் எதிர்ப்பு கோளாறுகள் அல்லது அடிப்படை நிலைமகள் இல்லாத ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா நோய் தொற்று வெவ்வேறு சூழலில் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ள்ளது. யுனிவெர்சிட்டி ஆஃப் நெவாடாவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பில், 48 நாட்கள் இடைவெளியில், நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகு 25 வயது ஆண் இரண்டு முறை கொரோனா நோய்க்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக ஏற்பட்ட பாதிப்பு அதிக தீவிரத்தன்மையை தந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கபப்ட்டு வருகிறது. இதற்கு முன்பு ஏற்பட்ட நோய்தொற்றில் அவருக்கு தேவையான முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. முதலில் பாசிட்டிவ் என்று முடிவுகள் வந்த நிலையில் ஏப்ரல் மாதம் அவருக்கு கொரோனா சோதனைகள் நெகட்டிவாக வந்தது. மீண்டும் ஜூன் மாதம் 2020ல் கடுமையான கொரோனா நோய் அறிகுறிகள், காய்ச்சல், தலைவலி, மயக்கம், இருமல், குமட்டல், மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணம் அடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மறுதொற்று தொடர்பாக ஆராய்ச்சிகள் அதிகம் தேவைப்படுகின்ற நிலையில், ஒவ்வொருவரும், ஏற்கனவே நோய் தொற்று ஏற்பட்டவர்களாக இருப்பினும் இல்லை என்றாலும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

 To read this article in English

SARS-CoV-2 தொற்றுகளும், நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடுகளும் இன்னும் அறியப்படாத நிலையில் உள்ளது. ஆனால் ஆராய்ச்சிகளின் முடிவுகள், முதன்மையான கொரோனா தொற்று, அடுத்த தொற்று ஏற்படுவதில் இருந்து தடுப்பதற்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கித்தரவில்லை என்று கூறுகிறார் மார்க் பண்டோரி, நெவடா பல்கலைக்கழகத்தின் மூத்த ஆசிரியர்.

இது ஒரு தனிநிகழ்வின் கண்டுப்பிடிப்புகள் தான். இதனால் பொதுவான தன்மையை வழங்க இயலாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பண்டோரி கூறுகிறார். குறிப்பாக ஒரு பயனுள்ள தடுப்பூசி இல்லாத நிலையில், கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், COVID-19 நோய் எதிர்ப்பு சக்தியைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், ஏற்கனவே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நபர்கள், தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவற்றை கடுமையாக அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பண்டோரி கூறியுள்ளார்.

இது போன்ற மறுதொற்று பெல்ஜியம், நெதர்லாந்து, ஹாங்காங், மற்றும் ஈகுவேடார் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரண்டாவது தொற்று முதல் நோயை விட மோசமான நோய் விளைவுகளை வெளிப்படுத்தியது ஒரே ஒரு நிகழ்வு மட்டும் தான். ஏற்கனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வளவு தூரம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பது குறித்தும், ஏன் ஒரு சில மறுதொற்றுகள் கடுமையான பாதிப்புகளை தருகிறது என்பதையும் ஆராய்ச்ச்சி செய்ய வேண்டும் என்று பண்டோரி கூறுகிறார்.  ராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நோயாளி வைரஸின் மிகவும் வேறுபட்ட மாறுபாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.

ஏற்கனவே ஏற்பட்ட நோய் தொற்றின் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் சில பாதுகாப்பு புரதங்கள் அடுத்தடுத்த தொற்றுநோயை மோசமாக்கும் என்று ஆன்டிபாடி சார்பு விரிவாக்கத்தின் பொறிமுறையை மற்றொரு நம்பத்தகுந்த விளக்கமாக கருதலாம். இந்த வழிமுறை, 2002-03 ஆண்டுகளில் ஏற்பட்ட SARS தொற்று வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களிடம் காணப்பட்டது. ஆய்வின் வரம்பை மேற்கோள் காட்டி, ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற நோய்த்தொற்றின் ஆரம்பத்தில் நோயெதிர்ப்பு குறித்து எந்த மதிப்பீட்டையும் வழங்க இயலவில்லை என்று கூறுகின்றனர்.

கொரோனா மறுதொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்கள், இது போன்று பல்வேறு மறுதொற்றுகள் நோயாளிகளுக்கு நிகழ்ந்திருக்கலாம் என்றும், நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், தற்போதைய சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளில் கண்டுபிடிக்க இயலாத நிலை உருவாகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment