/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-38.jpg)
Crocodile kills Indonesian man:
இந்தோனேஷியாவில் நண்பனை கடித்து குதறிய முதலையை பழிவாங்க, பண்ணையில் இருந்த 300 முதலைகளை இளைஞர் ஒருவர் வெட்டி சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள பப்புவா என்ற மாநிலத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்த பண்ணை அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பண்னை அருகே உள்ள புல் தரையில் சுகிட்டோ என்ற நபர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேளியை கடந்து வந்த முதலை அந்த நபரை கடித்து கொன்றது.இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுகிட்டோவை பார்த்த அவரின் நண்பர் மற்றும் கிராம மக்கள் கதறி துடித்தன்ர்.
அதன் பின்பு, இறந்த நபருக்கு அவர்களின் முறைப்படி அனைத்துய் இறுதி சடங்குகளையும் செய்து முடித்த கையோடு கூரிய ஆயுதங்களுடன் முதலை பண்ணை நோக்கி சென்றனர். கைகளில் கிடைத்த கத்தி, கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் கடுமையான கோபத்தில் பண்னைக்கு நுழைந்த அவர்கள் அங்கிருந்த 300 முதலைகளை கொன்று குவித்தனர்.
அரிய வகை முதலைகள், முதலை குட்டிகள், முட்டைகள் என எதையுமே விட்டு வைக்காமல் கொன்று குவித்து மொத்த பண்ணையும் காலி செய்தனர். கிராம வாசிகளை கட்டுப்படுத்த முடியாத பண்ணை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் இதுக் குறித்து புகார் அளித்துள்ளனர்.
சம்ப இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட காவல் துறை அதிகாரிகள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்ட கிராம வாசிகள் மற்றும் இறந்தவரின் நண்பர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பண்ணையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் டிப்படையில் விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்றும் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.