scorecardresearch

இத்தாலியில் குறையும் நோய் தொற்று ; சொந்த நாட்டிற்கு திரும்பினர் க்யூபா மருத்துவ குழுவினர்

சமீபத்தில் க்யூபாவில் இருந்து 300 மருத்துவ பணியாளர்கள் குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Cuban doctors who sent to fight against covid19 in Italy return home
Cuban doctors who sent to fight against covid19 in Italy return home

Cuban doctors who sent to fight against covid19 in Italy return home : கொரோனா வைரஸ் நோய் தொற்றால் மிகவும்  அதிக பாதிப்பிற்கு ஆளான ஐரோப்பிய நாடுகள் இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஸ்பெய்ன் ஆகும். இத்தாலியில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் என செத்து மடிந்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த அனைத்து முதியவர்களும் இறந்து போக, அவர்களை புதைப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் துரித வேகத்தில் எடுக்க முடியாமல் திணறி வந்தது அந்நாடு.

க்யூபாவில் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருந்தது அந்நாட்டு அரசு. அந்த பணியில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற மருத்துவ குழுக்களை உலகம் முழுவதும் அனுப்பி வைத்தது க்யூபா. தற்போது 12 க்யூபா மருத்துவக் குழுக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது போன்றே இத்தாலிக்கும் மருத்துவ குழுவை அனுப்பியது க்யூபா. 35 மருத்துவர்களும் 12 செவிலியர்களும் அடங்கிய அந்த குழு மார்ச் மாத இறுதியில் க்யூபாவில் இருந்து இத்தாலிக்கு சென்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நேற்றிரவு க்யூபாவில் இருந்து 300 மருத்துவ பணியாளர்கள் குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் இருக்கும் வல்லரசு நாடுகள் எல்லாம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திணறி வரும் சூழலில், இந்த சவாலான காலத்தில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது க்யூபா. இதுவரை 83 நபர்கள் மட்டுமே இந்நாட்டில் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Cuban doctors who sent to fight against covid19 in italy return home