மார்ச்சுவரிக்கு சென்று இரண்டாவது முறையாக உயிரை விட்ட நபர்!

அப்போது வரை ஹாங் உயிருடனே இருந்திருக்கிறார்

சீனாவைச் சேர்ந்தவர் சென். இவரது கணவர் ஹாங், வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டதான் காரணமாக, கடந்த சில மாதங்களாக கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் இரவு தூங்கிய ஹாங் காலை கண் விழிக்கவே இல்லை. இதனால், கணவர் இறந்துவிட்டதாக எண்ணிய சென், உடலை மார்ச்சுவரிக்கு கொண்டுச் சென்றிருக்கிறார். முன்னதாக, கையில் இருந்து பணம் முழுவதையும், கணவரின் மருத்துவத்திற்காக செலவு செய்தும், இறுதியில் மருத்துவர்கள் அவரது கணவரை காப்பாற்ற முடியாது என கூறியிருந்ததால், ஹாங் இறந்தே விட்டதாக சென் நினைத்துவிட்டார்.

ஆனால், மார்ச்சுவரியில் ஹாங்கின் உடலில் அசைவு தென்படவே, அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். அப்போது வரை ஹாங் உயிருடனே இருந்திருக்கிறார். சென் தவறுதலாகவே கணவர் இறந்துவிட்டதாக எண்ணி பிணவறைக்கு கொண்டு வந்திருக்கிறார். உயிர் இருக்கிறது என்பதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அவ்வளவு நேரம் உயிருடன் இருந்த ஹாங், துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் விரைந்து வந்து சோதனை செய்துக் கொண்டிருந்த நேரத்தில் உண்மையில் மரணம் அடைந்துவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close