Advertisment

இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் உரிமம்.. ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நடிகை பலி.. மேலும் செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பிரத்யேக பாடல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் என எந்தவித படைப்பாக இருந்தாலும் அந்த படைப்புகளுக்கான உரிமையை தனிநபர் டிஜிட்டல் சான்றிதழ்களாக பெறமுடியும்.

author-image
WebDesk
New Update
இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் உரிமம்.. ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நடிகை பலி.. மேலும் செய்திகள்


புதினுக்கு எதிராக பேசுங்கள் - இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை

Advertisment

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா இன்று 23-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைன் நடிகை

உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷிய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (வயது 67) உயிரிழந்தார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையும் உறுதி செய்துள்ளது.

உக்ரைன் நாட்டில் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உபகரணங்கள் என்ன தெரியுமா?

360 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கலத்தின் தலைப்பகுதி!

பெரு நாட்டின் ஒஷிகஜி பாலைவனத்தில் புதைப்படிம ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பாலைவனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஆய்வின் போது பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு பலிலோசாரஸ் என்ற திமிங்கலத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மண்டை ஓடு சுமார் 36 மில்லியன் அதாவது சுமார் 360 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் உரிமம் விரைவில் அறிமுகம் - மார்க் ஜுக்கர்பெர்க்

இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பிரத்யேக பாடல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் என எந்தவித படைப்பாக இருந்தாலும் அந்த படைப்புகளுக்கான உரிமையை தனிநபர் டிஜிட்டல் சான்றிதழ்களாக பெறமுடியும்.

இதன் மூலம் அனைவருக்கும் ஒரு பிரத்யேக படைப்புகளின் உரிமையாளர் யார் என்பதை எளிதில் கண்டறிய முடியும். அவரிடம் இருந்து அந்த படைப்புகள் அல்லது பொருள்களை பெறுவதற்கு மற்ற நபர்கள் விலை கொடுக்க வேண்டும்.

இந்த நிலையில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment