’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!!!

ஒரு விதமான விலங்கினத்தை ஞாபகப்படுத்தி

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை தீபிகா படுகோனே அணிந்து வந்த உடன் இப்படி ஒரு பேச்சையும் , கிண்டலையும் ஏற்படுத்தும் என்று எவருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.

பிரான்ஸில் நடைப்பெற்ற 71 ஆவது கேன்ஸ் பட விழாவில்  பாலிவுட் நடிகைகள் அணிந்து வந்த உடை தான்  இரண்டு நாட்களாக சமூகவலைத்தளக்களில் நெட்டிசன்களால் அதிகம் பேசப்பட்டு  வருகிறது.  பொதுவாக நடிகளுக்கு இந்த கேன்ஸ் பட விழா மிகவும் முக்கியமான ஒன்று.

காரணம்,  உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள்  அனைவரும்  தங்களின் உடை மற்றும் சிகை அலங்காரத்தில் தாங்கள் தான் பெஸ்ட் என்பதைக் காட்டும் விதமாக வித்யாசமான தோரணையில் உடை அணிந்து செல்வார்கள். ரெட் கார்ப்ரேட்,  விழா, பார்ட்டி என மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகை திபீகா படுகோனே அணிந்திருந்த பிங்க் நிற ஆடை யை  ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கலாய்த்துள்ளனர்.

பஞ்சு மிட்டாய் கலர் நிறத்தில் தீபிகா அணிந்திருந்த ஆடை மற்றும் அவர்  கொடுத்த போஸ் பார்ப்பதற்கு டைனோசரஸ் போல் இருப்பதாகவும்,   நிஜமாக தீபிகா அந்த ஆடையில் பார்க்க ஒரு விதமான   விலங்கினத்தை ஞாபகப்படுத்தி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து  தள்ளியுள்ளனர்.

 

 

 

×Close
×Close