செலின் கவுண்டர்: ஜோ பைடன் அடையாளம் காட்டிய இன்னொரு தமிழ் பெண்

தன்பெயருக்குப் பின்னல் ஏன் சாதியின் அடையாளம் இருக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

Docotr Celine Gounder controversy tweet Joe Baiden Covid 19 taskforce cm stalin tamil news
Docotr Celine Gounder controversy

Doctor Celine Gounder in Joe Baiden’s Covid 19 Taskforce CM Stalin Wish : சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் முதல் பெண் துணை முதல்வரான கமலா ஹாரிஸ், ஆல்ஃபபெட் இன்க் மற்றும் அதன் கிளை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை உள்ளிட்ட தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஏராளம். அந்த வரிசையில் அமெரிக்காவில் செட்டிலான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் செலின் கவுண்டர் இணைந்துள்ளார்.

நியூயார்க் பல்கலைக்கழக கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக இருக்கும் செலின், அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் கோவிட்-19 ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் செலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணிக்குழுவில் இடம் பிடித்த மற்றொரு தென்னிந்தியர், முன்னாள் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவர் விவேக் மூர்த்தி. இவர் கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2017-ம் ஆண்டில் ட்ரம்ப் நிர்வாகத்தால் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் அவர் சுகாதாரக் கொள்கைக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கோவிட் 19-ஐ எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்காவின் தேசிய தொற்று பணிக்குழுவில் செலின் கவுண்டர் மற்றும் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டாக்டர் செலின் கவுண்டர் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதினார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் கோவிட் -19-ஐ எதிர்த்துச் செயல்படும் தேசிய தொற்று பணிக்குழுவில் செலின் கவுண்டரை நியமித்ததைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான பணிக்குழுவில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் நியமிக்கப்பட்டதைப் பற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன்” என திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எச்.ஐ.வி / தொற்று நோய் நிபுணர் மற்றும் இன்டர்னிஸ்ட், தொற்றுநோயியல் நிபுணர், பத்திரிகையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் எனத் தன்னைப் பற்றி லிங்க்டின் (Linkedin) விவரகுறிப்பில் செலின் பதிவிட்டுள்ளார். செலினின் தந்தை ராஜ் கவுண்டர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் பி.ஏ. இளங்கலை பட்டமும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்திலிருந்து தொற்றுநோயியல் துறையில் முதுகலைப் பட்டமும் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் பட்டமும் பெற்றுள்ளார். ஹார்வர்டின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உள் மருத்துவத்தில் பயிற்சியாளராகவும், குடியிருப்பாளராகவும் செலின் இருந்துள்ளார். மேலும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களில் பிந்தைய முனைவர் பட்டம் பெற்றார். 2016-ல் அமெரிக்காவின் தொற்று நோய்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டிலிருந்து தனக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, தன்பெயருக்குப் பின்னல் ஏன் சாதியின் அடையாளம் இருக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார். அதில், “நான் பிறப்பதற்கு முன்பு 1970-களின் முற்பகுதியிலேயே என் தந்தை அவருடைய பெயரைக் கவுண்டர் என்று மாற்றிக்கொண்டார். என் பெயர் என் பெயர்தான். வேதனையான வரலாறுகள் இருந்தாலும் அது என்னுடைய அடையாளத்தின் ஒரு பகுதி. எனக்குத் திருமணமான பிறகும் என்னுடைய பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. இப்போதும் மாற்றப்போவதில்லை” என்று செலின் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் செலினின் இந்த ட்வீட்டுக்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Docotr Celine Gounder controversy tweet Joe Baiden Covid 19 taskforce cm stalin tamil news
Docotr Celine Gounder controversy tweet

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Docotr celine gounder controversy tweet joe baiden covid 19 taskforce cm stalin tamil news

Next Story
”அதிபரின் மனைவி தான்… ஆனாலும் கல்லூரி பேராசிரியராக பணியை தொடர்வேன்” – ஜில் பைடன்Jill Biden all set to become first-ever FLOTUS to have a full-time job while serving in office
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com