20 ஆண்டுகளாக வயிற்றில் டார்ச் லைட்டுடன் உயிர் வாழ்ந்த அதிசய மனிதர்!

சிறுவயதில் வயிற்றில் இருந்த பித்த கல்லை நீக்குவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில்  வாழும் நபர் ஒருவரின்  வயிற்றில் 20 ஆண்டுகளாக  இருந்த டார்ச் லைட்டை மருத்துவர்கள்  அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.

சீனாவில்  வசிக்கும் 28 வயதாகும் இளைஞர் ஒருவருக்கு நீண்ட காலமாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது.  இதனால் அடிக்கடி மருத்துவமனை சென்ற வந்த அவருக்கு,  மருத்துவர்கள்  மாத்திரைகள் வழங்கியுள்ளனர். இருந்த போதும் வயிற்று வலி குறையாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்பு, அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவரின் வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   அவரின் வயிற்றிலிருந்து  மினி சைஸ் டார்ச் லைட் ஒன்றை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகள் அந்த நபரின் வயிற்றில் டார்ச் லைட்  இருந்து இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சிதைந்த நிலையில் எடுக்கப்பட்ட அந்த டார்ச்  லைட் அவரின் வயிற்று பகுதியின் அடியில்  இருந்துள்ளது. இதனால் அவரின்   குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், இவ்வளவு ஆண்டுகள் வயிற்றில் டார்ச் லைட்டுடன் அந்த நபர் உயிர் வாழ்ந்ததே அதிசயம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டார்ஸ் லைட்டை அகற்றிய பின்பு அவரின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது.  சிறுவயதில்  வயிற்றில் இருந்த பித்த கல்லை நீக்குவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அப்போது தான் தவறுதலாக மருத்துவர்கள் டார்ச் லைட்டை அவரின் வயிற்றில் வைத்து தைத்துள்ளனர். இதைத்தான் மருத்துவர்கள் 20 ஆண்டுகள் கழித்து அகற்றியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close