பென்சில்வேனியா பேரணியில் காதில் துளைத்த புல்லட்: 'ஃபைட் ஃபைட் ஃபைட்' என கத்திய டிரம்ப்- வீடியோ
இந்த சரமாரியான துப்பாக்கிச் சூடு பீதியை ஏற்படுத்தியபோது, போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன்பு, டிரம்ப் ஃபைட் ஃபைட் ஃபைட் என்று கத்தி தனது எதிர்ப்பைக் காட்டினார்.
முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று பென்சில்வேனியா பிரச்சாரப் பேரணியில் பேசத் தொடங்கியபோது, நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, அதில் ஒன்று டிரம்பின் வலது காதைத் துளைத்தது. உடனே அவர் தன் ரத்தம் சிந்தும் காதை பிடித்துக்கொண்டார்.
Advertisment
விரைவில், ரகசிய சேவை போலீசார் திரண்டெழுந்து அவரை சூழ்ந்து கொண்டனர். இந்த சரமாரியான துப்பாக்கிச் சூடு பீதியை ஏற்படுத்தியபோது, போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன்பு, டிரம்ப் ஃபைட் ஃபைட் ஃபைட் என்று கத்தி தனது எதிர்ப்பைக் காட்டினார்.
🚨DEVELOPNG: Donald Trump just survived an assassination atempt.
— Donald J. Trump 🇺🇸 News (@DonaldTNews) July 13, 2024
Advertisment
Advertisements
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கொல்லப்பட்டார், இந்த சம்பவத்தில் பேரணியில் பங்கேற்றவர் ஒருவர் இறந்தார் மற்றும் இரண்டு பார்வையாளர்கள் காயமடைந்தனர் என்று ரகசிய சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிபிசியிடம் பேசிய நேரில் பார்த்த சாட்சி ஒருவர், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகே கூரையின் மீது ஊர்ந்து செல்வதைக் கண்டதாகக் கூறினார்.
JUST IN: New footage shows sn*per appearing to notice the suspect just milliseconds before the man sh*t at Trump.
The sn*per could be seen looking up in what appeared to be shock the moment the first bullet rang out.
இந்த துப்பாக்கி குண்டுகள் ரகசிய சேவையால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருந்து வந்ததாகத் தெரிகிறது என்று பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஒரு கொலை முயற்சியாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஜோ பிடனுடன் எதிர்கொள்ளும் நவம்பர் 5 தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்குள் துப்பாக்கிச் சூடு நடந்தது.