நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு - நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்ட டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.

author-image
WebDesk
New Update
Trump case

நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சிறை தண்டன, அபராதம் போன்ற எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Donald Trump escapes jail time, gets ‘unconditional discharge’ in hush money case

 

Advertisment
Advertisements

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டார். அந்த சமயத்தில், ஸ்டோமி டேனியல்ஸ் என்ற நடிகை, டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், இந்த விவகாரத்தை மறைக்க தனக்கு 130,000 மில்லியன் டாலர் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், இந்த பணப்பரிமாற்றத்தை மறைக்கும் விதமாக தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது 34 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த வழக்கில் இருந்து நிபந்தனைகளின்றி டிரம்ப் விடுவிக்கப்படுவதாக மேன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் டிரம்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையிலும், நிபந்தனைகளின்றி டிரம்ப் விடுதலை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.

Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: