அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயன்று அவருக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து எவ்வித காயமும் இன்றி தப்பிய டிரம்ப தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நேற்று வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் துப்பாக்சிக் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
டிரம்ப் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறுகையில், “டிரம்ப்பிற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து அவர் பாதுகாப்பாக உள்ளார். இந்த நேரத்தில் வேறு எதுவும் கூறமுடியாது. ” சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தில் தப்பிச் சென்ற சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஹவாய் நாட்டைச் சேர்ந்த 58 வயதான ரியான் வெஸ்லி ரூத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும் எப்.பி.ஐ இதுகுறித்து இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை.
டொனால்டு டிரம்ப்-ஐ குறிவைத்து நிகழ்த்தப்படும் 2-வது துப்பாக்கி சூடு முயற்சி இதுவாகும். முன்னதாக 2 மாதங்களுக்கு முன் பென்சில்வேனியாவில் பிரச்சார பேரணியில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது வலது காதில் சிறிய காயம் ஏற்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘I am safe and well’: Donald Trump after gunshots in his vicinity in apparent second assassination bid
சி.என்.என் அறிக்கையின்படி, நேற்று குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் , வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் துப்பாக்சிக் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பைடன், கமலா ஹாரிஸ் நலம் விசாரிப்பு
நேற்று நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதிபர் ஜோ பிடன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் இருவருக்கும் நிலைமை குறித்து விளக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், அதிகாரபூர்வ அறிக்கையின்படி டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து பைடன், கமலா ஹாரிஸ் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளது.
தொடர்ந்து கமலா ஹாரிஸ் கூறுகையில், அமெரிக்காவில் வன்முறை என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமில்லை என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“