டிரம்புக்கு சொந்தமான ரெசார்ட்டில் ஜி 7 மாநாடு - ஊருக்கு தான் உபதேசம் போல....
Donald Trump Miami resort for G7 summit : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்குசொந்தமாக மியாமி தீவில் உள்ள ரெசார்ட்டில், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜி 7 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Donald Trump resort g7 summit, g7 summit reump resort, G7 summit 2020, world news, டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி 7 மாநாடு, மியாமி , ரெசார்ட், ஜோ பிடன், உக்ரைன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்குசொந்தமாக மியாமி தீவில் உள்ள ரெசார்ட்டில், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜி 7 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisment
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இதுதொடர்பாக, செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜி 7 மாநாட்டுக்கு டிரம்புக்கு சொந்தமான மியாமி தீவில் உள்ள ரெசார்ட் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கமும் அளித்துள்ளனர். ஏன் அந்த ரெசார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது எனில், இதற்கு அருகிலேயே விமான நிலையம் உள்ளது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வசதியாக தங்குவதற்கு பிரத்யேகமான அறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மாஜி துணை அதிபர் ஜோ பிடனின் தந்தை ஹண்டர் பிடன், உக்ரைன் நாட்டின் துணை அதிபராக உள்ள நிலையில், அரசாங்க செலவில் ஜோ பிடன் சுயலாபம் அடைவதாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் தான் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்பே, சர்வதேச நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை, தமது சொந்த ரெசார்டில் நடத்துவதன் மூலம் ஆதாயம் அடைவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.