டொனால்ட் ட்ரெம்ப் ( Donald Trump) ரஷ்யா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஜொகனஸ்பெர்க்கில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் "எனக்கும் வாஷிங்கடனிற்கு செல்ல வேண்டும் என்றும், ட்ரெம்பினை மாஸ்கோவிற்கு அழைக்க வேண்டும் என்றும் ஆவல் இருக்கிறது. ஆனால் அதற்கான கால நேரம் ஒத்து வர வேண்டும்" என்று கூறினார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஹெல்சென்கியில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட இருவரும் தத்தம் நாடுகளுக்கு முறையாக அழைப்பு விடுப்பதைப் பற்றி பேசி வந்துள்ளனர். ஆனால் 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ட்ரெம்பிற்கு எதிராக ஆதரவாளர்களை ரஷ்யா திரட்டியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
To read this article in English
இது குறித்து மிகவும் வெளிப்படையாக "ரஷ்யாவின் விட்ச் ஹண்ட் இது" என்று பேசியிருந்தார் டொனால்ட் ட்ரம்ப். இந்த பிரச்சனைகள் சரியாகிவிட்டால் ட்ரெம்ப் மிக விரைவில் ரஷ்யா செல்வார் என நேசனல் செக்யூரிட்டி அட்வைசர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.
வெள்ளிக் கிழமை வந்த அழைப்பினைத் தொடர்ந்து ட்ரெம்ப் "ரஷ்யாவிற்கு நான் செல்ல விரும்புகிறேன் ஆனால் என்னை முறைப்படி ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் எனக்கு அழைப்பு விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.