அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, ஃப்ளோரிடா மாகாணத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய டிரம்ப். "அமெரிக்காவின் 47-வது மற்றும் 45-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, நான் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: US Election Results 2024 LIVE Updates: ‘I’m your 45th and 47th President’, says Trump as he inches closer to 270-mark
நான் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் தினமும் போராடுவேன். என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காக போர் புரிவேன். உங்கள் குழந்தைகளுக்கு வலிமையான, பாதுகாப்பான, வளமான எதிர்காலம் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். உண்மையிலேயே இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்.
நம்முடைய தேசத்தை நாமே மீட்டெடுப்போம். இது அமெரிக்க மக்களின் மகத்தான வெற்றி. செனட்டை நமது கட்டுப்பாட்டில் மீண்டும் பெறுவோம்" எனக் கூறினார்.
எலான் மஸ்கை புகழ்ந்த டிரம்ப்
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க்கின் ஆதரவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக, "எலான் என்ற புதிய நட்சத்திரம் நமக்கு கிடைத்துள்ளது. எலான் மஸ்க் ஒரு மேதை. மேதைகளை நாம் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் மேதைகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. இது போன்ற அதிபுத்திசாலிகளை நாம் பாதுகாக்க வேண்டும்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேபோல், "முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நமது தேசத்தை சிறப்பாக மாற்றப் போகிறோம். வெற்றியை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு வரப்போகிறோம். அனைத்தையும் நாம் சீரமைக்க போகிறோம். நான் ஒருபோதும் உங்களை கைவிட்டுவிட மாட்டேன்" எனக் கூறி டொனால்ட் டிரம்ப் தனது உரையை முடித்துக் கொண்டார்.
அதிபராக வெற்றி பெற்ற பின் டிரம்ப் வழங்கிய முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.