Advertisment

“தவளை தன் வாயால கெட்ட கதையா...” அமெரிக்க வைரஸாக உருமாறிய டொனால்ட் ட்ரெம்ப்!

இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில் பெரிய பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படியா நடந்து கொள்வது என்று பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சீன தற்காப்பு கலைக்கு குங்ஃபூ ; கொரோனாவுக்கு குங்ஃப்ளூ - புது பெயர் வைத்த ட்ரெம்ப்

Donald trump tweet backfired Netizens call him American Virus : அமெரிக்க அதிபருக்கு பேச்சு எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் பேசுகின்ற இடத்தைப் பற்றியும், நேரத்தைப் பற்றியும் துளியும் கூட அக்கறை இல்லாதவர். 2018ம் ஆண்டு கிறிஸ்துமஸின் போது சின்ன குழந்தை ஒருவரிடம் “இன்னுமா நீ கிறிஸ்துமஸ் தாத்தாவையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கின்றாய்” என்று கூறிய நபர் அவர். ஆனால் இன்று உலகமே மிகவும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், உலகின் அதி சக்தி வாய்ந்த பொறுப்பில் இருக்கும் டொனால்ட், கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுவது தான் சரியாக படவில்லை.

Advertisment

தமிழ் இந்தின் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று, ”வர்த்தகம் மற்றும் ஏர்லைன் நிறுவனங்கள், குறிப்பாக “சீன வைரஸால்” பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உறுதுணையாக இருக்கும். நாம் முன்பை விட அதிக பலமாக இருப்போம்” என்று கூறியுள்ளார்.

ரேசிசம் கமெண்ட்களுக்கு என்றே பெயர் பெற்றவராய் இவர் திகழ்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அனைவரும் சீனாவின் துபேய் மாகாணம், வுஹானில் பரவி வரும் நோயினை கொரோனா வைரஸ், கோவிட் 19 என்று அழைத்து வரும் போது, இவருக்கு மட்டும் அது சீன வைரஸாக தெரிந்திருக்கிறது. இவரின் இந்த ட்வீட்டுக்கு பதில் கருத்து தெரிவித்த பலரும், கொரோனா சீன வைரஸ் என்றால், டொனால்ட் ட்ரெம்ப் அமெரிக்க வைரஸ் என்று கூறி வருகின்றனர்.

இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில் பெரிய பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படியா நடந்து கொள்வது என்று பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சூழலுக்கு தகுந்த மாதிரி பேசாம, தேவையில்லாம ட்வீட் செஞ்சு, தேவையில்லாம வாங்கிக் கட்டிக்கிட்டது தான் மிச்சம்.

மேலும் படிக்க : ‘சூச்சின்’ டெண்டுல்கரா? தமிழக அரசியல் தலைவர்களுக்கு நேரடி சவால் விடுத்த டிரம்ப்! (வீடியோ)

Coronavirus Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment