அமெரிக்காவில் மாடி கார் பார்க்கிங்கில் நிறுத்தும் போதும் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் 4 ஆவ மாடியில் இருந்து கார் பறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா போன்ற பெரும் நகரங்களில் மாடி பார்க்கிங் என்பது அதிகளவில் காணப்படுவது வழக்கம் . அங்கு கார்கள் அதிகம் என்பதால் பார்க்கிங் வசதியை சுலபமாக்க மாடி பார்க்கிங் வசதி கையாளப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு மூதாட்டொ ஒருவர் காரில் தனியாக பயணம் செய்துள்ளார்.
பிரபலமான மால் ஒன்றிற்கு சென்ற அவர், 4 ஆவது மாடி பார்க்கிங்கில் தனது காரை பார்க் செய்துள்ளார். அப்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அந்த கார் மாடியில் இருந்து அப்படியே வெளியே வந்துள்ளது. பயத்தில் கத்திய அவர், முடிந்த வரை போராடி பிரேக்கை பிடித்து காரை நிறுத்தியுள்ளார்.
Wow, car in DTSM almost took the express exit from 4th floor of 4th Street garage earlier today. https://t.co/me2yfjY0pr #santamonica
— Bennet Kelley (@bennetkelley) 11 June 2018
இருந்தபோதும் அந்த கார் கீழே விழாமல் அங்கு இருந்த கம்பிகளில் சுமார் 1 மணி நேரம் தொங்கிக் கொண்டுள்ளது. கார் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனே மீட்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினருக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது. கார் அங்கு இருந்த கேபிள்களில் சிக்கி தொங்கி கொண்டிருந்ததால் கார் எஞ்சின் நிறுத்த முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தது. காருக்குள் இருந்த மூதாட்டியும் கேபிளில் சிக்கி கத்திக் கொண்டிருந்தார்.
INCIDENT ALERT: @santamonicafd is on scene of a vehicle hanging off of the 4th floor of Parking Structure 5 on 1400blk of 4th St. Occupants unharmmed. USAR team is stabilizing vehicle and working to remove from the edge. Please avoid the area. pic.twitter.com/EfwYmaYFcv
— Santa Monica Fire (@santamonicafd) 11 June 2018
கடைசியில் பல மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு படையினர் அந்த காரையும் காரில் இருந்தவரையும் காப்பாற்றி உள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.