அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், குடி போதையில் தவறான இடத்தை தேர்வு செய்ததால், 1 லட்சம் வரை பில் கட்டிய சம்பவம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
நவீன உலகில் பயணம் செய்வது மிகவும் எளிமையாக மாறி வருகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஸ்மார்ஃபோன்கள் பெரிதளவில் உதவுகின்றன. வழி காட்டலில் துவங்கி, பயணத்திற்கு ஏதுவான வாகனத்தை தேர்வு செய்வது வரை ஸ்மார்ஃபோன்களின் பங்கு அதிகளவில் இருந்து வருகின்றன. இப்படி தொழில் நுட்பங்களின் வளர்ச்சி சில நேரங்களில் நமக்கு ஆபத்தையும் விளைவிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா நகரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னி பச்மேன் என்ற இளைஞர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விடுதி ஒன்றிற்கு பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.
இந்த நிலையில், தான் தனியாக கார் ஓட்டிச் செல்வது பாதுகாப்பு அற்றது என நினைத்த அந்த இளைஞர், ஆன்லைனில் உபர் நிறுவனத்தில் கேப் ஒன்றை புக் செய்துள்ளார். காரில் ஏறிய பின்பு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பச்மேன், சுமார் 2 மணி நேரம் கழித்து கண் விழித்து பார்த்துள்ளார். அதன் பின்பு, காரை ஓட்டிய டிரைவரிடம் தனது வீட்டின் முகவரியைக் கேட்டு இன்னும் அந்த இடம் வரவில்லையா? என்று கேட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர், பச்மேனிடன் நீங்கள் புக் செய்துள்ள இடம் 300 மையில்களை தாண்டியது என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு திகைத்த அந்த இளைஞர் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லிவிட்டு காரில் இருந்து வெளியேறியுள்ளார், அதன் பின்பு, புக் செய்த இடத்தை ஸ்மாட்ஃபோனில் சரி பார்த்ததில், தவறுதலான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
பின்பு, அந்த காரிலே மீண்டும் தனது வீட்டிற்கு பயணித்த என்னி பச்மே, இறுதியாக 1.06 லட்சம் பில்லாக உபர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.