”ராக்” குடும்பத்தினருக்கு கொரோனா : வீடியோவால் ரசிகர்கள் வருத்தம்!

ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த நோய் தொற்றால் அவதியுற்று வரும் அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Dwayne Johnson and family tested positive for coronavirus : மல்யுத்த வீரர் மற்றும் நடிகருமான ட்வெய்ன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கி வரும் இந்த வைரஸால் தற்போது பெரும் அச்சமும், பொருளாதார சரிவும் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, தானும், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆளாகியுள்ளனர் என்று  ட்வெய்ன் ஜான்சன் கூறியுள்ளார்.

ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த நோய் தொற்றால் அவதியுற்று வரும் அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் அனைவரும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய மனைவி லாவ்ரன் மற்றும் குழந்தைகள் தியா மற்றும் ஜேஸ்ஸி நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மற்ற அனைத்துவித பிரச்சனைகளைக்காட்டிலும் வித்தியாசமானது. அடிகள், காயங்கள், முறிவுகள் கூட இப்படிப்பட்டதாக ஒரு போதும் இருந்ததில்லை. என்னுடைய முதல் கடமை என்பது எப்போதும் என் குடும்பத்தை பாதுகாப்பதாகும். எனக்கு மட்டும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று விரும்புகின்றேன். ஆனால் என் குடும்ப உறுப்பினர்களும் இந்த தொற்றால் அவதியுற்று வருகின்றனர் என்று அவர் வீடியோவில் கூறியுள்ளார்.  11 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்ட இந்த வீடியோவை இது வரையில் 55 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dwayne johnson and family tested positive for coronavirus

Next Story
கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவிற்கு வழி வகுக்கும் – WHO எச்சரிக்கை!Opening up socities too quickly amid covid19 will lead the disaster says WHO chief
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com