தென் கொரியாவில் இரண்டாவது முறையாக மிக பெரிய நிலநடுக்கம் தாக்கியுள்ளது. புதன்கிழமை அன்று 5.4 மேக்னிடியுட் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பெரிய சேதங்களை உருவாக்கியுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வீட்டை இழந்து, டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
தென்கிழக்கு கடற்கரை சுற்றியுள்ள பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.
உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி வியாழக்கிழமை அன்று 1,536 மக்கள் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றும் 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என அறிவித்திருந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பல கட்டிடங்கள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. தென் கொரிய ஊடகம் வெளியிட்ட படத்தில், சிதறிய சுவறுகள் வாகனங்கள் மீது விழுந்துள்ளதை காண முடிகிறது.
பல முக்கிய கட்டிடங்கள் விரிசல் விட்டதால் பல்கலைக்கழக நுழைவு தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர். அரசால் நடத்தப்படும் இந்த வருடாந்திர தேர்வு தென் கொரியாவில் நடை பெரும் தேசிய நிகழ்வாகும்.
1978ல் தென் கொரிய அதிகாரபூர்வமாக தொடங்கியதில் இருந்து இது இரண்டாவது வலுவான நிலநடுக்கம் ஆகும். இதற்கு முன் செப்டம்பர் 2016ல் ஏற்பட்டது. ஆனால் அதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
300 கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் சியொல் வரை நில அதிர்வு உணரப்பட்டது.