ஜப்பானில் 5.8 ரிக்டர் நிலநடுக்கம்! நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு : எச்சரிக்கை

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை.

ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிமேன் என்ற இடத்தின் கடலோர பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டது.

5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் தரை பகுதியில் உள்ள கட்டிடங்கள் சிதையும் அபாயம் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜப்பானின் இந்த நிகழ்வால் பொது மக்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், வருங்காலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

×Close
×Close