இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஒரு தற்கொலைப்படை தீவிரவாதியின் மனைவி, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, இந்தியா தப்பியோடி விட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக, இலங்கை போலீசார் அர்ஜூனா மகேன்கண்டா தலைமையில் விசாரணை நடத்திவந்தனர். விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் நெகம்பு பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அட்சிசி முகம்மது ஹஸ்டனின் மனைவி புலஸ்தினி ராஜேந்திரன் என்ற சாரா, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தினத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை, ஜூலை 6ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு பெண், அது சாராவாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, சைந்தமருது பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அவர் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால், அவர், இந்த குண்டுவெடிப்பிற்கு முன்னதாகவே, இலங்கையின் மன்னார் கடலோர பகுதி மூலம், இந்தியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்க தினத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக, கொழும்பு கிரைம் போலீசார், குற்ற புலனாய்வு துறை, தீவிரவாத செயல்களை விசாரணை அமைப்பு உள்ளிட்டவைகள் இணைந்து நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
கொழும்பு கிரைம் டிவிசன் அளித்துள்ள தகவலின்படி, சாரா, கலவஞ்சிகுடி பகுதியில் உள்ள மாங்காடு கிராமத்தில் பதுங்கி இருந்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இலங்கை காவல்துறையின் ஊடகத்துறையின் இயக்குனர் ஜாலியா செனரத்னே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சாரா, இந்தியாவில் எங்கு இருக்கிறார் என்ற உறுதியான தகவல் எங்களிடம் இல்லை, ஆனால், அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அவளின் உறவினர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 2 பேரை, அம்பாரா துறைமுகம் அருகே கடந்த 13ம் தேதி கைது செய்துள்ளோம். அவர்கள் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.
ஈஸ்டர் நாளன்று நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமானவர்கள் சைந்தமருது பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படைகள் அந்தபகுதியில் நடத்திய தாக்குதலில், 4 பெண்கள், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பலியாகியிருந்தனர்.
சைந்தமருது பகுதியில் நிகழ்ந்த பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு பிறகு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அங்கு ஆய்வு நடத்தியதில் தற்கொலைப்படை தாக்குலுக்கு காரணமான முக்கிய தீவிரவாதி ஜஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் அங்கிருந்து உயிருடன் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
ஹசீமின் மனைவி குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil