Elon Musk Tamil News: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக வலம் வருபவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பை கொண்டுள்ள இவரை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக சமீபத்தில் தேர்வு செய்திருந்தது.

எனினும், சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், இவருக்கு எதிராக ஒரு பிரிவினரும் எப்போதும் தங்கள் கருத்துக்களை பதிவிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், தனது நிறுவனத்தில் இருந்து ஈட்டும் வருமானத்திற்கு எலான் மஸ்க் முறையாக வரி கட்டுவதில்லை என அவருக்கு எதிராக சில அரசியல் தலைவர்களும், மற்றும் சிலரும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களின் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி தரும் விதமாக தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தான் இந்த வருடம் ரூ .83,000 கோடி வரி செலுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனிநபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும்.
For those wondering, I will pay over $11 billion in taxes this year
— Elon Musk (@elonmusk) December 20, 2021
எலான் மஸ்க் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் அவர் செலுத்துள்ள வரித்தொகை இத்தனை கோடிகளா? என அவரை கிண்டல் செய்த நெட்டிசன்கள் வாயைப் பிளந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“