அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், வாக்கு எண்ணிக்கையை 24 மணி நேரத்தில் முடித்த இந்திய தேர்தல் முறையை உலகின் மிகப்பெரிய தொழிலதிபர் எலோன் மஸ்க் பாராட்டியுள்ளார்.
எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க், அமெரிக்க தேர்தல் முறையை விமர்சித்து, “இந்தியா ஒரு நாளில் 640 மில்லியன் வாக்குகளை எண்ணியது. கலிபோர்னியா இன்னும் வாக்குகளை எண்ணிக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Here’s what Elon Musk had to say about elections in India
ஒரு பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, “இந்தியா ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகளை எண்ணியது. கலிஃபோர்னியா இன்னும் 15 மில்லியன் வாக்குகளை எண்ணிக் கொண்டிருக்கிறது…” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகும், கலிபோர்னியா மாநிலத்தில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சில தகவல்கள் இன்னும் 3,00,000 வாக்குகள் எண்ணப்பட உள்ளதாகக் கூறுகின்றன.
கலிபோர்னியா தேர்தல் முடிவுகளை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை?
சுமார் 39 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியா, அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு தேர்தல் செயல்பாட்டில் சுமார் 16 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். 2020-ல் நடந்தது போல் தேர்தலை நடத்தி முடிக்க வாரங்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெளிவாக கூறியுள்ளனர்.
கலிஃபோர்னியாவின் வாக்குச் சீட்டு செயல்முறை முக்கியமாக அஞ்சல் வாக்களிப்பை மையமாகக் கொண்டுள்ளது, இது தனிப்பட்ட முறையில் வாக்களிப்பதை விட அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“