ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய ராக்கெட் ’ஃபல்கான் ஹெவி’ விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது.
உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க்கின், கடந்த ஆண்டு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில், உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை, ஒன்றைத் தான் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், இதனுடன் செட்லைட்டுக்கு பதிலாக கார் ஒன்றையும் அனுப்ப உள்ளதாக கூறினார். எலோனின் இந்த திட்டத்திற்கும் நாசா விஞ்ஞானிகள் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், எலோன் மஸ்க்கின் தனது கனவு திட்டத்தை இன்று, நிறைவேற்றியுள்ளார்.
18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் கொண்டது இந்த ராக்கெட், வெற்றிரகமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போலோ 11 ஏவப்பட்ட அதே இடத்தில் இருந்து 18,747 ஜெட் வேகத்தில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனரவால் விண்வெளி தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இதில் மிகப்பெரிய சக்தியை உருவாக்க 27 எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் 70 மீட்டர்(229.6 அடி) உயரமும், 12.2 மீட்டர் அகலமும் உடையதாகும். செவ்வாய் கிரகம் வரை சென்று இந்த ராக்கெட்டில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் திரும்பி வரும் போது காற்றில் உராய்வு ஏற்பட்டுத் தீ பற்றி எரியாதவாறு இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இந்த ராக்கெட்டில் 'செர்ரி ரெட் டெஸ்லா'என்ற கார் சாட்டிலைட்டுக்கு பதில் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் அனைத்து பக்கத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்ணில் நிகழும் அனைத்தும், புகைப்படங்களாக எடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படும். இந்த காருக்கு ’ஸ்டார் மேன்’ என்று செல்லப்பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.