ஊழியர் வணிகப் பயணத்தில் உறவுக்குப்பின் மாரடைப்பால் உயிரிழப்பு; இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Employee dies during sex on business trip: ஊழியர் ஒருவர் வணிக பயணத்தின்போது உடலுறவில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் இறந்துபோனதால், அவருடைய மரணத்தை ஒரு...

Employee dies during sex on business trip: ஊழியர் ஒருவர் வணிக பயணத்தின்போது உடலுறவில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் இறந்துபோனதால், அவருடைய மரணத்தை ஒரு தொழில்துறை விபத்து என்றும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாரிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேவியர் என்பவர், 2013 ஆம் ஆண்டில் ரயில் பொறியியல் நிறுவனமான டி.எஸ்.ஓ-வின் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநராக மத்திய பிரான்சில் உள்ள லோயிரெட் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கே இரவில், வேலைக்குப் பிறகு, தனது ஹோட்டல் அறைக்குத் திரும்புவதற்கு முன்பு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார். பின்னர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருடைய மரணத்தை, ஒரு உடல்நலக் காப்பீடு வழங்கும் நிறுவனம் வேலை தொடர்பான விபத்தால் மரணம் ஏற்பட்டது என்று முடிவு செய்தது. இருப்பினும், சேவியர் ஒரு விபச்சார உறவுக்காக தனது பணி பயணத்திற்கு இடையூறு விளைவித்ததாகவும், இது நிறுவனத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் டி.எஸ்.ஓ நிறுவனம், காப்பீடு நிறுவனத்தின் முடிவை எதிர்த்தது.

இதர்கு காப்பீட்டு நிறுவனம் பாலியல் நடவடிக்கை என்பது ஷவர் குளியல் போல, சாப்பிடுவது போல சாதாரணமானது என்று வாதிட்டது. மேல்முறையீட்டில் பாரிஸ் நீதிமன்றம் இந்த கருத்தை உறுதிசெய்தது. ஒரு வணிக பயணத்தில் ஒரு ஊழியர் தனது பணியின் முழு நேரமும் அவருக்கு சமூக பாதுகாப்புக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளது.

பிரெஞ்சு சட்டத்தின்படி, ஒரு வணிக சுற்றுப்பயணத்தில் நிகழும் எந்தவொரு விபத்தும் வேலை தொடர்பானது மற்றும் அது ஊழியரின் பணியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இல்லாவிட்டாலும், அதற்கு முதலாளியே பொறுப்பு. அதனால், ஊழியர் வணிக சுற்றுப்பயணத்தில் உடலுறவுக்குப்பின் மாரடைப்பால் இறந்தாலும் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாரிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil International News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close